நறுமணங்கள் வாஸ்து,Vaastu of perfumes

வாஸ்து
விழிப்புணர்வு கருத்துக்கள்:
பல்வேறு காரியங்களில் பல்வேறு வாசனை திரவியங்களை பயன்படுத்துகின்றனர் நமது மக்கள். நறுமணங்கள் எப்பொழுதுமே ஒரு இடத்தின் எதிர்மறை சக்தியை விரட்டி அவ்விடத்தை ஒரு இணக்கமான சூழ்நிலையை கொடுக்கக்கூடியவை. காரணம் இரண்டு வகையில் சுத்தப்படுத்த கின்றன. நெருப்பின் வழியே வரக்கூடிய நறுமணப் புகைகள் அல்லது, நீரின் வழியாக வரக்கூடிய நறுமணப் பகைகள். ஆக இந்த இரண்டு விஷயங்கள் இல்லாது நறுமனம் சார்ந்த விஷயங்களை ஒரு இடத்தில் உட்புகுத்த முடியாது.

அந்த வகையில் மதம் சம்பந்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் நறுமணப்பொருட்கள் என்பது சந்தன குச்சிகள் மற்றும் தசாங்கம் போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி அவ்விடத்தை நாம் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம். அதேபோல வீடுகளை கிருமிநாசினிகளை சுத்தம் செய்யும் பினாயில் வழியாக ஒரு வித வாசனை திரவியங்கள் கலந்து இடத்தைசுத்தப்படுத்தி கொள்கின்றோம். நாம் குளிக்க பயன் படுத்தும் சோப்பு மூலமாக வாசனை பொருட்கள் கலந்து இருப்பதை நாம் உணர முடிகின்றது.

 
நாம் பயன்படுத்தும் வாகனங்களில் நறுமணம் ஏற்படுத்தும் வாசனைத்திரவியங்கள் அக்காலத்தில் நமது முன்னோர்கள் அத்தர், சந்தனம் ஜவ்வாது போன்ற பொருளை பயன்படுத்தி ஒவ்வொரு இடங்களையும் சுத்தப்படுத்தி உள்ளனர். அதேபோல நல்ல வாசனை திரவியங்களை கொடுக்கக்கூடிய மலர்களும் வாஸ்து ரீதியாக பரிகாரங்களாக செயல்படுகிறது. தினமும் மனம் உள்ள மலர்கள் மூலமாக இடத்தை புனிதப்படுத்துகிறோம். ஆக இல்லத்தில் அத்தர் சந்தனம் ஜவ்வாது போன்ற இயற்கை நறுமணப் பொருட்களை பயன்படுத்துங்கள் இதனால், சில இடங்களில் வாஸ்து இருக்கிறதோ இல்லையோ, சுத்தம் சோறு போடும் என்பதற்கிணங்க வீட்டில் மிக மிக சுத்தமாக வைத்திருந்தாலே எதிர்மறை சக்திகள் இவ்விடத்தை விரட்டப்படும்.

 

கூடுதலாக வடக்கு கிழக்கு ஜன்னலைத் திறந்து வைத்து, தெற்கு மேற்கு சன்னலை மூடி வைக்கும் பொழுது, அவ்விடத்தின் உயிர்சக்தியை மேல் எழுப்ப முடியும் . சுத்தம் என்பது வேறு எதுவும் கிடையாது அதுவே மகாலட்சுமி தாயார் ஆவார்.மகாலட்சுமி தாயார் ஒரு இல்லத்தில் நுழைய வேண்டும் என்று சொன்னால், இல்லம் மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒன்றைக்கூறிக் கொள்கின்றேன். அழகு என்பதற்கும், சுத்தம் என்பதற்கும் வேறு அர்த்தங்கள் உண்டு. இந்த இரண்டையும் நீங்கள் புரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

 

 

error: Content is protected !!