Choosing Right Colours For Your Home,

color vastu
color vastu

 

 

 

 

 

     இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே தனது பார்வையில் வண்ணங்களாக அனைத்து பொருளும் தெரியும் என்று சொல்ல முடியாது. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களின் பார்வைக்கு பழைய கால கருப்பு வெள்ளை திரைப்படங்களாக தான் தெரியும். மனிதனுக்கு மட்டும் வர்ணங்களின் கலவையிலிருந்து வானவில்லின் ஏழு நிறங்களையும் பகுத்தறிந்து அறியக்கூடிய தன்மையை இயற்கையும், கடவுளும், பிரபஞ்சமும் நமக்கு வழங்கியுள்ளது.ஆக மனிதன் தனது மனநிலையையும் மனோ சக்தியும் அதிகரித்து வாழ்க்கையில் வெற்றி பெற வர்ணங்களை பயன்படுத்த முடியும் அந்த வகையில் எந்த நிறங்களை பயன்படுத்தினால் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் என்று பார்ப்போம்.

 

நிறங்கள் என்பது ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒரு தன்மையுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால், வெள்ளை நிறம் அமைதியை குறிக்கக் கூடிய விஷயம். அதனால் தான் நம்முடைய வள்ளலாரும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தினார்.நமது ஞானிகளும் வெள்ளை நிறத்தை பரிந்துரைத்தனர்.ஆக இல்லங்களில் வெளிப்புறப் பகுதிக்கு முதன்மை தரம்வாய்ந்த நிறம் வெள்ளை நிறமாகும். ஏன் நமது இந்தியாவின் பாரம்பரிய உடை கூட வெள்ளை நிறமே. அப்படிப்பட்ட வெள்ளை நிறத்தை வீட்டின் வடகிழக்கு மேற்கு சுவரில் மற்றும் தெற்கு சுவரில் உபயோகிக்கலாம் .

 

மஞ்சள் நிறம் என்பது செல்வத்தை ஏற்கக் கூடிய விஷயம் அப்படிப்பட்ட மஞ்சள் நிறத்தை வீட்டின் கிழக்கு சுவற்றில் உபயோகப்படுத்துவது சாலச்சிறந்தது. அதேபோல பச்சை நிறம் என்பது வழமையையும் செல்வாக்கையும் குறிக்க கூடிய விஷயம் அப்படிப்பட்ட பச்சை நிறத்தை வடக்கு சுவரிலும், வடக்கு சாந்த அறைகளில் வடக்கு சுவரில் உபயோகிக்கலாம்.
சிகப்பு என்பது வெப்பத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு நிறம். அப்படிப்பட்ட நிறத்தினை வீட்டின் வரவேற்பறையில் உபயோகிப்பது இருப்பது நலம். குறிப்பாக சமையல் செய்யக்கூடிய பகுதிகளுக்கு இளம் சிவப்பு நிறங்களை வைப்பது சாலச்சிறந்தது .

 

அதேபோல அமைதி என்று சொல்லக்கூடிய ஒரு நிறம் இருக்கிறது அந்த நிறமே நீல நிறம். பெருமாளை கூட நாம் நீலவர்ண கண்ணா வா வா என்று பாடுகிறோம். அப்படிப்பட்ட நிறம் நீல நிறம் ஆகும்.அதாவது கருமை கலந்த நீலம். அதாவது கடவுள்களில் மகாவிஷ்ணுவே மேகமாக பாவிக்கின்றோம். அப்படிப்பட்ட மேகத்தின் நிறம் நீல நிறம் மனித வாழ்வில் காக்கும் கடவுளாக இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவின் நிறமான நீல நிறத்தை படுக்கை அறையில் வைக்கவேண்டும். அதாவது மேகம் என்பது சூரியனின் ஒளியை மறைத்து குளிர்ச்சியை தரக்கூடிய விஷயம்.ஆக அமைதியான ஆழ்ந்த உறக்கம் வேண்டுமெனில் படுக்கை அறைக்கு நீல நிறத்தை உபயோகிப்பது சாலச்சிறந்தது.
அடுத்ததாக வீட்டின் வெளிப்புற பகுதிகளில் வெள்ளை மட்டுமே அடிப்பது சாலச்சிறந்தது. அதனை தவிர்த்து கூடவே கட்டிடத்தின் பார்டர் என்று சொல்லக்கூடிய பகுதிகளுக்கு அங்கு வாழும் மனிதர்களுக்கு எந்த நேரம் ஒத்து வருகிறதோ, யாருடைய பெயரில் வீடு இருக்கிறதோ, யாருடைய வாழ்க்கையில் தற்போது நடக்கும் தசாபுத்திகள் பணத்தை கொடுக்கக்கூடிய, வளத்தை கொடுக்கக் கூடிய, மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய, விதி வழியே மதி என்கிற சந்திரன் தசையை நடத்திக் கொண்டிருக்கிறதோ, அந்த திசைக்கு சார்ந்த வர்ணத்தை அடிப்பது நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும்.

 

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,

www.chennaivasthu.com

E-mail:

jagan6666@gmail.com

Android App:

https://play.google.com/store/apps/details?id=com.wChennaiVasthu_8718184&hl=en

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

error: Content is protected !!