தொழில் கனவு வாஸ்து வழிவகுக்குமா?

 

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

 

 

 

 

 

 

 

 

நமது இளைஞர்கள் எங்கு எப்படி படித்து நல்ல தொழிலை அல்லது, வேலையை கொடுக்கும் விசயமாக தயார் ஆகிறார்கள் என்பது முக்கிய விசயம் கிடையாது. நமது வீட்டின்அமைப்பு மட்டுமே ஒருவரை தயார் செய்கிறது..

வாஸ்து என்பது நமது வெற்றிக்கான சூழலைத் தயாரிக்க நம்மைச் சுற்றியுள்ள சக்தியைப் பயன்படுத்தும் ஒரு அறிவியல். நீங்களே ஒரு துறையில் ஒரு தொழிலைத் திட்டமிடுகிறீர்களானால்,அதுசார்ந்த வடமேற்கு பகுதி வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வடமேற்கு விரிந்து இருக்கும் இடம் என்பது தொழில் சார்ந்த விசயத்தில் தடைகளை கொடுக்கும்.

இதற்கு அப்பார்பட்டு ஒருசில பொருள்கள் உங்கள் இல்லத்தில் அதிஷ்டம் வழங்கும் பொருள்களாக இருக்கும்.பத்து பதினைந்து சதவீதம் அளவில் உங்கள் வேலை சார்ந்த நிகழ்வுகளில் எதிர்மறை செயல்களை தடுத்து துணை புரியும்.
சரஸ்வதி தேவியின் விருப்பப்படும் பொருட்களில் ஒன்று வீணா. வீணா மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டு அதை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சி மற்றும் அமைதியின் சூழ்நிலையை உருவாக்குகிறது. இது நமது படைப்பாற்றலை மேம்படுத்துகிறது.இதனால் அவர்களின் அறிவு விருத்தி ஆகும்.தினமும் வீணை இசையை கேட்பது கூட அதிஷ்ட வாழ்க்கை வாழ துணை புரியும்.
ஹான்ஸ் என்று சொல்லக்கூடிய அன்னப்பறவை என்பது சரஸ்வதி தேவியின் வாகனம், இதன் காரணமாக இது நல்லதாக கருதப்படுகிறது. அன்னத்தின் படம் அல்லது வீட்டின் ஒரு பகுதியில் வைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு குடும்ப நபர்களின் கண்ணும் அந்த பறவை மீது தினமும் இருக்க வேண்டும்.

தாமரை மலரை மற்ற பூக்களுடன் தினசரி அல்லது வாரம் ஒருமுறை வழிபாட்டிலும் பயன்படுத்த வேண்டும். தாமரை மலரை கோவிலில் இருந்து வாங்கி வந்து வீட்டில் பணப்பெட்டியில் வைத்திருப்பது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதியின் சூழ்நிலையை உருவாக்குகிறது.பழைய தாமரையை பணப்பெட்டியில் வைத்து ஒரு மாதம் கழித்து பார்த்தால் நன்றாக காய்ந்து விடும். அதனை மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொண்டு வாரம் ஒருதடவை இல்லத்தில் புகை காட்டி வர வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்ட துணை புரியும். புதிய பூக்களை கோவிலில் இருந்து வாங்கி வந்து ஒவ்வொரு வாரமும் பணப்பெட்டியில் வைக்கவும். இது வீட்டில் ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது, இது உங்கள் இலக்கை அடைய உதவுகிறது.பணம் சார்ந்த வாழ்க்கையில் தன்னிறைவு வழங்கும்.

error: Content is protected !!