House Division Vastu, Property Disputes

வீட்டு காம்பவுண்ட் உள்ளாக கிளைவீடு

House Division Vastu, Property Disputes
Vastu For Partition, Vastu for division of a House, House Division

வீட்டு காம்பவுண்ட் உள்ளாக கிளைவீடு கட்டி வாடகைக்கு விடுவது நன்மையா?

நாம் குடியிருக்கும் பகுதியில் தனியாக சிறியதாக வீடு தனியாக கட்டுவது பலவிதமான பிரச்சனைகளை கொடுக்கும்.அதனைப்பற்றி தெரிந்து கொள்வோம் .
 
வடகிழக்கு பகுதி :
 
மொத்த வீட்டமைப்பில் வடகிழக்கில் கிளைவீடு அமைப்பு வருவது மிக மிக தவறு.அது பேய் உள்ள வீடாக மாறிவிடும். ஆண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.பெண் சொத்தாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம். வீட்டின் எஜமான் நிரந்தர வேலையில்லாமல் இருப்பது. நிலையான வருமானம் இல்லாமல் இருப்பது.
 
 
 
 எப்பொழுதுமே குழப்பமான மனநிலையில் இருப்பது.
 
தென்கிழக்கு பகுதி :
 
இந்த பகுதியில் துணைவீடு தாராளமாக வரலாம். அப்படி வரும்போது ஒரு அனுபவமிக்க வாஸ்து நிபுணரின் உதவியோடு செய்ய வேண்டும்.
தெற்கு பகுதியில் காலியிடம் அதிகமானால், வடக்கு பகுதியில் உள்ள நமது வீடே நமக்கு பாரமாகி கடன்சுமையில் கொண்டு போய்விடும்.
 
 
 
தென்கிழக்கில் ஏதாவது தவறு ஏற்படும்போது பெண்களின் உடல் காற்றாற்று வெள்ளம்போல ஓட ஆரம்பித்துவிடும். மொத்த குடும்பத்தில் நிம்மதி போய்விடும்.
மற்றும் . பெண்கள் மட்டும் விபத்தில் சிக்கி கொள்ளுதல், தற்கொலை எண்ணம், நோய் ஏற்படுதல் போன்றவை ஏற்படக்கூடும்.
 
 
 
மொத்த இடத்தில் தென்மேற்கில் துணைவீடு வந்து, அதை வாடகைக்கு விடுவது மிகவும் தவறு.பொருளாதார பிரச்சனை, தொழிலில் பிரச்சனை.
 கடன் பிரச்சனை.
கணவன், மனைவிக்குள் பிரச்சனை.குடும்ப விவகாரத்தில் மூன்றாவது நபரின் தலையீடு.
சொத்து ஏலம் போகுதல் போன்றவை ஏற்படும்.
 
 
 
மொத்த வீட்டமைப்பில் வடமேற்கில் கிளைவீடு அமைத்துக்கொள்ளலாம். இங்கும் அனுபவமிக்க வாஸ்து நிபுணரின் ஆலோசனையோடு செய்ய வேண்டும்.
மேற்கு பகுதியில் காலியிடம் அதிகமாகும்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் கடன்சுமையில் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள்.
அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வார்கள், அதிலும் கால் பகுதியில் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.
வடக்கு பகுதியில் வீடு இருந்தால் முதல் குழந்தை பாதிக்கும். வீட்டை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதாவது பிரிந்து வாழ நேரிடும்.
ReplyForward
error: Content is protected !!